“புலாவ் பெசார் தீவு தற்காலிமாக மூடப்படுகிறது” – மலாக்கா முதல்வர்.!

Malacca
Image tweeted by Sulaiman Md. Ali

மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தற்போது திகழ்ந்து வருகின்றது. இந்நிலையில் மலாக்கா மாநில அரசு பிரபல புலாவ் பெசார் (Malacca) தீவு பகுதியை தற்காலிகமாக மூட முடிவெடுத்துள்ளது.

மலேசியாவின் சபா, சிலாங்கூர் போன்ற பகுதிகளில் தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகின்றது இதனால் இந்த முடிவினை (Malacca) மலாக்கா அரசு எடுத்துள்ளது.

இதுகுறித்து பேசிய அம்மாநில முதல் அமைச்சர் சுலைமான் முஹம்மத் அலி, மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க.

இந்தியா வந்து செல்ல புதிய விமான சேவை..?

கடந்த அக்டோபர் 28ம் தேதி தொடங்கி மறுதேதி அறிவிக்கும் வரை அந்த தீவு பூட்டுதலில் இருக்கும் என்று தெரிவித்தார்.

இந்தத் தடை காலத்தில் அந்த தீவில் எந்தவித நடவடிக்கைக்கும் அனுமதி இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விதி புலாவ் பெசார் தீவை சுற்றியுள்ள சிறு தீவுகளுக்கும் பொருந்தும் என்றார் அவர்.

மலேசியாவில் நேற்றும் 500-க்கும் அதிகமான மக்கள் கொரோனா காரணமாக பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பல நகரங்கள் சிவப்பு மண்டலங்களாக மாறுவது குறிப்பிடத்தக்கது.

புலாவ் பெசார் தீவை பொறுத்தவரை இந்த தடை முடிவானது மாநில பாதுகாப்பு கூட்டத்தின் முடிவுக்கு ஏற்பவே எடுக்கப்பட்டுள்ளது என்று மலாக்கா முதல்வர் தெரிவித்தார்.

மத நிகழ்வுகள் மற்றும் சுற்றுலா ஆகிய அம்சங்களுக்கு பெயர்பெற்ற இடம் புலாவ் பெசார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த தீவு பூட்டுதலில் இருக்கும்.

விரைவில் சகஜ நிலை திரும்ப மக்கள் உதவ வேண்டும் என்று அரசு தெரிவித்து வருகின்றது. வெளியில் செல்லும்போதும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram