மீண்டும் கெடா பகுதியில் லாக் டவுன்..! – சிவகங்கை கிளஸ்ட்டரும் ஒரு காரணமா..?

Kedah Lockdown
Photo courtesy coconuts

நோய் தொற்றின் பரவலை முற்றிலும் ஒழிக்க பல நாடுகளும் தங்களால் ஆனா அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து மலேசியா திரும்புவோர் மலேசியா வந்து இறங்கும்போது அவர்களுக்கு நோய் தொற்று இல்லை என்று உறுதியாகும் நிலையில் அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டனர். ஆனால் பலர் அதை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டும், அவ்வாறு தனிமைப்படுத்திக்கொள்ளாதவர்களால் நோய் தொற்றும் பரவிய நிலையில் மலேஷியா திரும்பும் அனைவரும் அரசு விடுதியில் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இது ஒருபுரம் இருக்க கடந்த ஜூலை 13ம் தேதி சிவகங்கையில் இருந்து மலேசியா திரும்பியவர் (நிரந்தர குடியுரிமை பெற்றவர்) நோய் தொற்று இல்லாததால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார். ஹோட்டல் உரிமையாளராக கருதப்படும் அவர் தனிமைப்படுத்துதல் காலத்தில் தடையை மீறி வெளியில் சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு தொற்று உறுதியான நிலையில் கெடா பகுதியில் அவர் மூலமாக சுமார் 30-க்கும் அதிகமானோருக்கு தொற்று பரவியது.

மேலும் கெடா பகுதியில் தொற்று தொடர்ந்து அதிகரித்த நிலையில் அம்மாநில முதல்வர் முஹமது சனுசி முஹமது நூர் வெளியிட்ட அறிக்கையில் பொதுப்பூங்காக்கள் மூடப்படும் என்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு தடை விதிப்பதாகவும் அறிவித்தார். உணவகங்களில் உணவருந்த தடை, இரவு மார்க்கெட்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் இயங்க தடை என்று மீண்டும் அங்கு கட்டுப்பாட்டை பாலப்படுத்துவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms