“தனியார் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது”

Private Health Workers
Image Tweeted by Noor Hisham Abdullah

இன்று முதல் கொரோனா தடுப்பூசி வழங்குதலில் அடுத்தகட்டமாக தனியார் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தொடங்கியது. (Private Health Workers)

இந்த அறிவிப்பினை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா அவர்கள். (Private Health Workers)

“புதிதாக உருமாறிய கொரோனா” – மலேசியாவில் இருவர் பாதிப்பு.?

மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணியில், முதற்கட்டமாக 5,71,802 முன்களப் பணியாளர்களுக்கு வழங்க அண்மையில் பட்டியல் தயாரானது.

கடந்த பிப்ரவரி 21ம் தேதி ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நகரங்களில் இருந்து முதற்கட்ட தடுப்பூசி மலேசியா வந்திறங்கியது.

மேலும் அடுத்தகட்ட தடுப்பூசி பிப்ரவரி 26ம் தேதி மலேசியா வந்திறங்கியது. மேலும் பல நாடுகளில் இருந்து தடுப்பூசிகள் பெறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் பிப்ரவரி 26ம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக இந்த கொரோனா தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

முன்னர் 5,71,802 முன்களப்பணியாளர்களின் பெயர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசி வழங்கப்படும் என்றும் தகவல் வெளியானது.

படிப்படியாக அடுத்த ஆண்டு தொடக்கம் வரை அனைவருக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த தடுப்பூசியின் ஒரு “டோஸ்” மக்களுக்கு தேவையான எதிர்ப்புசக்தியை தரும் என்று ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

மலேசியாவில் இன்று 1680 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டனர். மேலும் 7 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

அதே சமயம் இன்று ஒரே நாளில் 2548 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram