“இந்தியர்கள் கணக்கெடுப்பில் உடனடியாக கலந்துகொள்ளவேண்டும்”

Population Survey
Photo Courtesy tamilmurasu.com.sg

மலேசிய நாட்டில் வசிக்கும் சுமார் 2 மில்லியன் இந்தியர்களில் இதுவரை வெறும் 4 லட்சம் இந்தியர்கள் மட்டுமே கணக்கெடுப்பில் கலந்துகொண்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. (Population Survey)

ஆகையால் இணைய வழியில் நடக்கும் கணக்கெடுப்பில் இந்தியர்கள் கட்டாயம் கலந்துகொள்வேண்டும் என்று மலேசிய தமிழ் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. (Population Survey)

“திருச்சி கோலாலம்பூர் இருமுனை பயணம்” – டிக்கெட் முன்பதிவு தொடக்கம்.!

மேலும் இந்தியர்கள் கணக்கெடுப்பில் கலந்துகொள்ள புள்ளி விவரத்துறை முனைப்புடன் இருப்பதாகவும் ஆர். எஸ். மோகன் தெரிவித்துள்ளார்.

இந்தியர்கள் தங்கள் வாக்குரிமையை தவறாமல் பயன்படுத்தி தங்கள் கடமையை ஆற்றுவது போல இந்த கணக்கெடுப்பிலும் கலந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பல நாடுகளை சேர்ந்த மக்கள் இங்கு ஒற்றுமையோடு வாழ்த்து வருகின்றனர். அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை நாடுகிறது மலேசியா.

இந்த கொரோனா காலத்திலும் பல வளர்ந்த நாடுகளுக்கு மருத்துவத்தில் முன்னோடியாக திகழ்கின்றது என்றால் அது மிகையல்ல.

மலேசியாவின் இந்த இமாலய வளர்ச்சிக்கு பெரும் பங்காக இந்திய மக்கள் திகழ்வது யாராலும் மறுக்க முடியாத விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நடைபெறும் இந்த கருத்துக்கணிப்பு பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில் இந்தியர்கள் இதனை பயன்படுத்த வேண்டும்.

இணைய வழியின் வாயிலாக நிச்சயம் இந்தியர்கள் கருத்துக்கணிப்பில் கால்கொண்டு தங்கள் தகவல்களை தரவேண்டும் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram

Twitter

* Instagram