பொங்கலோ பொங்கல் ..மலேசியாவில் பொங்கல் கொண்டாடும் நேரங்கள் எவை ?

pongal

பொங்கல், அறுவடை பெருவிழாவாக உலகமெங்கும் உள்ளவர்காளால் கொண்டாடப்படுகிறது, தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது முதுமொழி. இந்த வருடம் கீழ்காணும் நான்கு நாட்களில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி பண்டிகை : ஜனவரி 14ம் தேதி
தை பொங்கல் : ஜனவரி 15ம் தேதி
மாட்டு பொங்கல் : ஜனவரி 16 தேதி
காணும் பொங்கல் : ஜனவரி 17ம் தேதி

தை திருநாள் தொடக்கத்தில், புது பானையில் பொங்கலிடுவது வழக்கம். சூரிய கடவுளை வணங்கி புது பானையில், புது அரிசி, வெள்ளமிட்டு குலவை சத்தமிட்டு பானையில் அரிசி பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என்று சத்தமிட்டு கொண்டாடப்படுகிறது. அன்று நல்ல நேரம் மலேசிய நேரப்படி காலை 10.20 மணி முதல் 11.30 மணி வரை என்று கூறப்படுகிறது. அதே போல நல்ல நேரம் மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை என்று கூறப்படுகிறது.