“பொங்கல் மதம் சார்ந்த பண்டிகை” – மலேசியாவில் கிளம்பும் புது பிரச்சனை ?

pongal

பொங்கல், உலகம் முழுதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை, விவசாயிகள் தங்கள் உழவுக்கும் நல்ல விளைச்சலுக்கும் உதவிய எல்லாவற்றுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக முன்று நாள் பொங்கல் விழாவை கொண்டாடி வரும் நிலையில், மலேசியாவில் உள்ள Islamic Development Department (Jakim) பொங்கலை மதம் சார்ந்த பண்டிகை என்று அறிவித்தது மலேசியாவில் வாழும் பல தமிழகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

கடந்த ஜனவரி 15ம் தேதி முதல் தொடர்ந்து முன்று நாட்கள் ஜனவரி 17 வரை உலகமெங்கும் உள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகை கொண்டாப்பட்டு வருகின்றது, இந்நிலையில் கடந்த ஜனவரி 15ம்  தேதி மலேசியாவில் உள்ள ஒரு சில இடங்களில் உள்ள பள்ளிகளில் பயிலும்  முஸ்லிம் மாணவர்களின் பெற்றோர்களுக்கு “தங்கள் பிள்ளைகளை பொங்கல் பண்டிகைகளில் பங்கேற்ற வைப்பதில் கனவாம் தேவை என்று அறிவுருதப்பட்டதாக தெரிகிறது”.

பள்ளியின் இந்த நிலைபட்டால், சமுதாய ஒற்றுமையை வளர்க்கவே பள்ளிகள் முயலவேண்டுமே தவிர இதுபோன்ற போன்ற செயல்பாடுகளுக்காக அல்ல என்று பலர் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர், மேலும் சில முஸ்லிம் பெற்றோர்கள் தெரிவிக்கும்போது, பள்ளிகள் கலாச்சாரம், சம்பர்தாயம் உள்ளிட்ட அனைத்தையும் கடந்து மனிதம் என்ற ஒன்றையும் நல்ல அறிவு தரும் கல்வியையும் மட்டுமே போதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டதாக களநிலவரங்கள் தெரிவிகின்றன.

இந்த விஷயம் குறித்து மதம் சார்ந்த விஷயங்கள் (Religious Affairs) அமைச்சர் முஜஹிட் யூசோப் ராவா வெளியிட்டுள்ள அறிக்கையில் மலேசியா எப்பொதும் பிற மதங்களை மதிக்கும் நாடு என்றும், பொங்கல் பண்டிகை மதம் சார்ந்த பண்டிகை என்று Jakim ஒருபோதும் கருதியதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் அந்த குறிப்பிட்ட பள்ளிகளில் என்ன நடந்தது என்பது குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவத்தார்.