மலேசியாவில் மீண்டும் தலைதூக்குகிறதா போலியோ – ஒரு சிறு அலசல்

polio vaccine

மலேசியா, கடந்த 2000மாவது ஆண்டு முதல் போலியோவில் இருந்து முழுதும் விடுபட்ட நாடக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் இந்த 2020ம் ஆண்டில் போலியோ இங்கு மீண்டும் தலைதூகுகிரதோ என்ற எண்ணம் தோன்றியுள்ளது, காரணம் இரு சிறார்கள் தற்போது போலியோ குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் பதினோரு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் தற்போது இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பற்றி ஆய்வு செய்த போது அவர்கள் மலேசியாவின் சபாஹ் பகுதியில் வசித்து வருவது கண்டறியப்பட்டது. இவர்கள் இருவருக்கும் சிறுவயது முதலே எந்த நோயேதிர்ப்பு மருந்துகளும் கொடுக்கப்படவில்லை என்றும் மேலும் இவர்கள் மலேசியாவை ஒட்டியுள்ள பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார இயக்குனர், டாக்டர். நூர் ஹிசாம் அப்துல்லா இதுகுறித்து கூறியபோது, இந்த இரு சிறுவர்களின் உடல்நலம் குறித்து ஆராய, இந்த சிறுவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் WHO Polio RRL என்று அழைக்கபடும் World Health Organisation Polio Regional Refrence Laboratory என்ற நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும். கடந்த ஜனவரி 9ம் தேதி அந்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டு அந்த இருவருக்கும் போலியோ இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சுகாதார இயக்குனர் பேசும்போது, இந்த சசிறுவர்களுக்கும் மரபு ரீதியாகவே இந்த நோய் உள்ளதாகவும் அவை பிலிப்பின்ஸ் நாட்டை சேர்ந்தது என்றும் தெரிவித்தார். தற்போது அந்த சிறுவர்கள் அதிக கவனிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.