மலேசியா : ‘போலியான தகவல்களை நம்பாதீர்கள்’ – ட்விட்டரில் சுட்டிக்காட்டிய டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா

Noor Hisham

உலக அளவின் 95 சதவிகித நாடுகளில் பரவி உள்ளது கொரோனா. ஆட்சியாளர்கள், மருத்துவ நிபுணர்கள், அரசு ஊழியர்கள், காவல்துறையினர் என்று பலரும் தன்னலம் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் இந்த கொரோனாவோடு சேர்த்து வேறு சில விஷயங்களோடும் போராட வேண்டிய நிலையில் உள்ளார்கள் அவர்கள். அதற்கு சான்றாக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார் மலேசிய சுகாதார அமைச்ச இயக்குனர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா.

கொரோனாவை விட அதிவேகமாக பரவி, தேவையற்ற பயத்தை ஏற்படுத்தும் ‘புரளிகள்’ தான் அது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் ஜெனரல் வெளியிட்டதாக கூறி “தற்போது நிலவும் சூழலில் மக்கள் கடைபிடிக்க வேண்டியவை” என்ற குறிப்புடன் ஒரு செய்தி வலம்வருகிறது. அதில் “இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு வெளிநாட்டு பயணங்களை தவிருங்கள், இன்னும் ஒரு ஆண்டு காலத்திற்கு வெளியில் எங்கும் உணவருந்தாதீர்கள், கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு ஒரு ஆண்டுக்கு செல்லாதீர்கள் போன்ற குறிப்புகள் அடங்கிய அந்த அறிவிப்பை நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்றது”

இந்நிலையில் அந்த விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் மேற்கோள்கட்டி அது ‘போலியான தகவல்’ என்று தெளிவுபடுத்தியுள்ளார் சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா.