‘வெளிநாட்டுத் தொழிலார்களை அனுமதிக்க வேண்டும்’ – கோரிக்கை வைக்கும் செம்பனை தோட்ட உரிமையாளர்கள்..!!

asia.nikkei.com

மனித உயிர்களை அனுதினம் பலிவாங்கும் இந்த கொரோனா தொற்று உலக அளவில் பொருளாதாரத்தையும் சிதைத்து வருகின்றது. பலர் இதனால் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த நோயினை சரியான முறையில் கையாண்டு வரும் மலேசியா சில புதிய விஷயங்களை நாட்டில் அமல்படுத்தியுள்ளது. இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து தவிக்கும் மலேசியர்களுக்கு உள்ளுர் நிறுவனங்கள் வேலை அளிப்பதை உறுதி செய்ய, இந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு தொழிலார்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க கூடாது என்ற புதிய முடிவினை அரசு எடுத்துள்ளதாக தகவல்கள் அன்மையில் வெளியானது.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய மனிதவள அமைச்சர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த சூழ்நிலையில் மலேசியாவில் உள்ள செம்பனை தோட்டங்களில் வேலை செய்ய பிறநாட்டு ஊழியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தோட்ட நிர்வாகத்தினர் தற்போது மலேசிய அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர்.

உலக அளவில் செம்பனை எண்ணெயை ஏற்றுமதியில் மலேசிய இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிதும் நம்பி இருக்கும் இந்த தொழில் தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் புதிய விதியால் பெரும் சேதத்தைசந்திக்கும் என்று அந்த தோட்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.