“கே.எல் உள்ளிட்ட நான்கு பகுதிகளில் நடமாட்டக்கட்டுப்பாடு அமல்” – மலேசிய அரசு.!

PKP Tioman Island
Image Tweeted Ismail Sabri

கே.எல், பினாங்கு, சிலாங்கூர் மற்றும் ஜோகூர் ஆகிய பகுதிகளில் மார்ச் 5ம் தேதி தொடங்கி 18ம் தேதி பி.கே.பி.பி எனப்படும் நடமாட்டக்கட்டுப்பாடு அமல்படுத்தப்படும். (PKPP in Penang)

இந்த அறிவிப்பினை பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். (PKPP in Penang)

“தடுப்பூசி பெற்றவர்களை சிங்கப்பூர் செல்ல அனுமதிக்க வேண்டும்” – ஜோகூர் அரசு.!

மேலும் சபா மாநிலத்தை தவிர்த்து பிற இடங்களில், மாநிலம் கடந்த பயணத்திற்கு அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல கிளந்தான், சரவாக் மற்றும் கெடா ஆகிய பகுதிகளில் நடப்பில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சரவாக்கில் ஏற்கனவே நேற்று முதல் அமலில் உள்ள நடமாட்டக்கட்டுப்பாடு மார்ச் 15ம் தேதி வரை தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது.

மலாக்கா பகுதியிலும் நடமாட்டக்கட்டுப்பாடு மார்ச் 5ம் தேதி முதல் அமலாக்கம் பெறுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மலேசியாவில் புதிதாக 1555 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதே சமயம் 2528 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர்.

தற்போது மலேசியாவில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி முழுவீச்சில் தொடங்கி நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்களப்பணியாளர்கள் 5 லட்சம் பேரின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது.

அடுத்த ஆண்டு தொடக்கத்திற்குள் சுமார் 32 மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram