“வீட்டுக்கு இருவர் மட்டுமே அனுமதி” – தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டுகோள்.

PKP in Malaysia
Image tweeted by EdgeProp Malaysia

மலேசியாவில் ஒருசில மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில் கடந்த நவம்பர் 9ம் தேதி முதல் (PKPP in Malaysia) டிசம்பர் மாதம் 6ம் தேதி வரை நிபந்தனைக்கு உட்பட்ட நடமாட்டக்கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது.

இந்த அறிவிப்பை மலேசியாவின் பாதுகாப்பு அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சபரி யாக்கோப் அண்மையில் தெரிவித்தார். (PKPP in Malaysia)

“தமிழகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் மலேசிய பட்ஜெட்..?”

மலேசியாவில் (Perintah Kawalan Pergerakan Pemulihan) PKPP எனப்படும் மறுசீரமைக்கப்பட்ட இயக்க கட்டுப்பாட்டு ஆணை அமலில் உள்ளது.

கிளந்தான், பெர்லிஸ் மற்றும் பாஹாங் ஆகிய மாநிலங்களை தவிர பிற மாநிலங்களில்.

இந்த மறுசீரமைக்கப்பட்ட இயக்க கட்டுப்பாட்டு ஆணை அடுத்த மாதம் 6ம் தேதி வரை அமலில் இருக்கும்.

இந்த கட்டுப்பாடு அமலில் உள்ள காலத்தில் மாநிலங்கள் கடந்த பயணம் அனுமதிக்கப்படமாட்டாது.

மேலும் அவசர தேவைக்கு போலீசாரிடம் அனுமதி பெற்று பயணம் செய்யலாம்.

மேலும் இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்படுகின்றன. வீட்டில் இருந்து இருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறி அத்யாவசிய பொருட்கள் வாங்க அனுமதிக்கப்படுவர்.

இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் இந்த வீட்டுக்கு இருவர் மட்டுமே வெளியில் செல்ல அனுமதி என்ற கட்டுப்பாடு குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இரு வேறு வீடுகளை சேர்ந்த நால்வர் ஒன்றாக இணைந்து உணவகத்தில் உணவருந்தினால் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்காதா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளார்.

மேலும் இந்த PKPP ஆணையை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் அரசு கோரிக்கை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சபா, கோலாலம்பூர், சிலாங்கூர் போன்ற பகுதிகளில் தினமும் அதிக அளவில் தொற்று அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக சபா பகுதியில் தான் மலேசியாவிலேயே அதிகபட்சமான தொற்று தொடர்ந்து பதிவாகி வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram