சிலாங்கூரில் விரைவில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணி தொடக்கம்.!

Phase 2 Vaccination
Image Tweeted by Madi Azmadi

நாடு முழுவதும் தற்போது கொரோனா தடுப்பூசி அளிக்கும் பணி விரைந்து நடந்து வருகின்றது. சில இடங்களில் இரண்டாம் கட்ட பணியும் முடிவடைந்துள்ளது. (Phase 2 Vaccination)

மேலும் இரண்டு கட்ட தடுப்பூசி பெற்றவர்கள் பிற நாடுகளுக்கு பயணம் மேற்கோள் அவர்களுக்கு சிறப்பு சலுகை குறித்தும் பேச்சுவார்த்தை நடைபெறுகின்றது. (Phase 2 Vaccination)

“இரண்டு தடுப்பூசி பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகை” – பரிசீலித்துவரும் மலேசிய அரசு.!

இதுவரை மலேசியாவில் 6,92,4337 பேருக்கு கொரோனா வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் ஆதம் பாபா தெரிவித்துள்ளார்.

அதேபோல் சிலாங்கூர் பகுதியில் 1,92,6232 பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் அறிவியல் அமைச்சர் திரு. கஹேரி ஜமாலுதீன் கடந்த மார்ச் 25ம் தேதி சிலாங்கூர் பகுதிக்கு சென்று அங்கு தடுப்பூசி பணிகளை பார்வையிட்டார்.

மேலும் சிலாங்கூரில் இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட தடுப்பூசி பணிகளுக்கு தேவையான விஷயங்களை கேட்டறிந்தார்.

நேற்று பகல் 12 மணி நிலவரப்படி புதிதாக உள்ளூரில் 1243 பேருக்கும் வெளிநாடுகளில் இருந்து மலேசியா திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மலேசியாவை பொறுத்தவரை இதுவரை கொரோனவால் பாதித்த மக்களின் எண்ணிக்கை என்பது 3,39,443 என்ற மிகப்பெரிய அளவை தொட்டுள்ளது.

இதுஒருபுற இருக்க கொரோனாவின் மூன்றாம் அலையில் உள்ள மலேசியாவில் குணமடைவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 1509 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 3,23,925 பேர் நலமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

நேற்று மட்டும் மலேசியாவில் ஒருவர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளார். இதுவரை 1249 பேர் கொரோனா காரணமாக மரணித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram