“அவசரநிலை பிரகடனத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்” – மாமன்னருக்கு கருணை மனு.!

Petition to King
Photo Courtesy www.aa.com.tr

மலேசியாவில் நடப்பில் உள்ள அவசரநிலை பிரகடனத்தை திரும்ப பெற வேண்டி மாமன்னருக்கு கருணை மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. (Petition to King)

இவ்வாண்டு தொடக்கத்தில் மலேசியாவில் கொரோனாவின் தாக்கம் பெருமளவு இருந்தது. 4500 என்ற எண்ணிக்கையை தாண்டி தினமும் தொற்று பரவியது. (Petition to King)

“மார்ச் 1 முதல் மீண்டும் படி படியாக பள்ளிகள் திறக்கப்படும்” – ராட்ஸி ஜிடின்.!

இதனை அடுத்து மலேசியாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹமத் ஷா அறிவித்தார்.

பரவி வரும் பெருந்தொற்றை வேரடி மண்ணோட அகற்ற இந்த நடவடிக்கை அவசியம் என்று மாமன்னர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி வரை இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக தகவல் அப்போது வெளியானது.

ஆனால் இந்த அவசரநிலை பிரகடனத்தால் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், பொருளாதாரம் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

வேலையிழப்புகள் அதிகரித்திருப்பதால் மாமன்னர் இந்த அவசரநிலை பிரகடனத்தை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து மலேசிய மக்கள் சக்தி கட்சி மாமன்னருக்கு கருணை மனு ஒன்றை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. (Petition to King)

மலேசிய மக்கள் கட்சியின் இந்த கருணை மனுவை அரண்மனையில் மாமன்னரின் அந்தரங்க செயலாளர் பெற்றுக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram