‘இஸ்லாமியர்கள் அல்லாத பிற மத திருமணங்களுக்கு அனுமதி..!!’ – பாதுகாப்பு அமைச்சர்

Marriage Assemblers
Twitter Image

மலேசியாவில் இன்னும் முழுமையாக கொரோனா ஒழிக்கப்படவில்லை என்றபோதும், கடந்த சில நாட்களாக தொற்றின் அளவு குறைந்து வருகின்றது. மேலும் படிப்படியாக பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தினங்களுக்கு முன்பு தொற்று இல்லாத பச்சை நிற பகுதிகளில் உள்ள கோவில்கள் திறக்க அரசு அனுமதி அளித்தது. அதன் பிறகு சிகையலங்கார கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இஸ்லாமியளார்கள் அல்லாத பிற மதத்தினர் திருமண விழாக்கள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சபரி யாக்கோப் தெரிவித்துள்ளார். மேலும்இந்த திருமண விழாக்களின்போது 20 பேருக்கு அந்த இடத்தில் கூடக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண விழாவில் பிறப்பிக்கப்பட்டுள்ள SEO முறையாக கடைபிடித்து சமூக இடைவெளியையும் கடைபிடிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது. .

மேலும் திருமண வரவேற்பு நிகழ்வுகள் நடத்த தடை நீடிக்கின்றது என்றும் தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக ஜூன் 2ம் தேதி முதல் திருமணத்திற்காக மாநிலங்கள் கடந்த பயணத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.