‘பிற மாநிலங்களுக்கு செல்ல காவல் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்..?’ – அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

State Travel Malaysia

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் இயக்கக்கட்டுப்பாடு மலேசியாவில் அமலில் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த மே மாதத்தின் தொடக்கத்தில் பொருளாதார வீழ்ச்சியை குறித்து சில பொருளாதார துறைகளை திறக்க அரசு அனுமதி அளித்தது. அதனை அடுத்து மலேசியாவின் பல பகுதிகளில் பல வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டு விற்பனை நடந்து வருகின்றது.

இந்நிலையில் மூத்த அமைச்சர் திரு. இஸ்மாயில் சப்ரி யாக்கோப் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற மாநிலங்களில் வேலை செய்வதற்காக வாய்ப்பினை பெற்றுள்ள மக்கள் அந்த மாநிலங்களுக்கு பயணம் செய்ய தற்போது விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதன்படி, பிற மாநிலங்களில் அண்மையில் வேலை வாய்ப்பு கிடைத்தவர்கள் அனைவரும் தங்களது இருப்பிடத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இக்கட்டான சூழலில், முதலாளிகள் இணையவழியாக வேலைக்கான நேர்காணலை நடத்த அவர் அழைப்பு விடுத்துள்ளார்.