‘பிற நாட்டவர்கள், மலேசியாவிற்கு திரும்ப முடியாது..?’ – மூத்த அமைச்சர் வெளியிட்ட புதிய விதி..!!

ismayil

அண்மைக்காலமாக மலேசியாவில் பிற நாடுகளில் இருந்து வந்து, உரிய ஆவணங்கள் இன்றி வேலை செய்யும் தொழிலார்கள் பலரை அரசு கைது செய்து வருகின்றது. இந்நிலையில் நேற்று புதிய அறிக்கை ஒன்றை மூத்த அமைச்சர் இஸ்மாயில் சபரி யாகோப் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் பிற நாடுகளில் இருந்து மலேசியா வந்து உரிய ஆவணங்களோடு வேலை செய்து மீண்டும் தற்போது தங்களது சொந்த நாடுகளுக்கு தப்பி செல்பவர்கள் யாரும் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

உதாரணமாக பிற நாடுகளில் இருந்து மலேசிய வந்து, உரிய ஆவணங்களோடு வேலை செய்து தற்போது ராயா பெருநாளை தங்கள் நாடுகளுக்கு பதுங்கி சென்று கொண்டாடிவிட்டு மீண்டும் அவர்கள் மலேசியா திரும்பினாள் அவர்கள் நாட்டிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார். பரவும் கொரோனா காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஓப் பெந்தெங் என்ற நடவடிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு மலேசிய எல்லைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.