மலாக்கா : ‘பூக்களை புகைப்படமெடுத்த மக்கள்..!!’ – அதிரடியாக வந்து அதிர்ச்சி கொடுத்த போலீசார்..!

sakura flowers

மலேசியா முழுதும் பெரிய அளவில் பொருளாதார துறைகள் திறக்கப்படவில்லை என்றபோதும் மக்களின் அன்றாட வாழ்க்கை சற்று மீண்டு வருகிறது என்றே கூறலாம். விலையேற்றம், தொடர்ந்து அதிகரிக்கும் நோய் தொற்று ஆகியவை அச்சுறுத்தி வந்தாலும், மக்கள் சிறிதளவு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த மார்ச் 18ம் தேதி தொடங்கிய இயக்கக்கட்டுப்பாடு தற்போது சிறிதளவு தளர்வடைந்து உள்ளதே அன்றி முற்றிலும் விளக்கப்படவில்லை. இந்நிலையில் மலாக்காவில் MCO கட்டுப்பாட்டை மீறியதாக 20 பேருக்கு சுமார் 1000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Taman semabok perdana என்ற பகுதியல் உள்ள வெள்ள நீர்த்தேக்க இடத்தில் பூத்திருக்கும் ஊதா நிற அழகிய மலர்களை (சக்கூறா மலர்களாக இருக்கலாம்) சிலர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில் MCO கட்டுப்பாடு உள்ள நேரத்தில் தேவை இன்றி 15-க்கும் அதிகமான கார்கள் அந்த பகுதியில் நிற்பதை கண்டு அங்கு சென்ற போலீசார் பலர் அங்கு நின்று மலர்களை புகைப்படம் எடுப்பதை கண்டு அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.