தனிமைப்படுத்துதல் செயல்முறைக்கு ஒத்துழைக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்..! – மலேசிய அரசு

noor hisham abdullah

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி தொடங்கிய ஊரடங்கு நிகழ்வு கடந்த மே மாதம் முதல் சில தளர்வுகளுடன் தற்போது வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிமைப்படுத்துதல் மையத்தில் இருந்து சுமார் 5900 பேர் வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அவ்வாறு வீடு திரும்பும் நபர்கள் தங்களுடைய இல்லங்களில் கட்டாயம் 14 நாட்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள அரசு வலியுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டும் இல்லாமல் அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து சென்று வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் உள்ள மக்கள் சரியாக 13வது நாளன்று மீண்டும் சோதனை மையங்களுக்கு சென்று சோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தி உள்ளது.

இந்நிலையில் சுமார் 5900 பேர் வீட்டிற்கு சென்ற நிலையில் இதுவரை 4437 பேர் மட்டுமே மீண்டும் மருத்துவமனைக்கு சென்று சோதனை செய்துள்ளதாகவும் இன்னும் 1000 பேருக்கு மேல் சோதனை செய்ய வரவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவ்வாறு சோதனைக்கு வரதபட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.