“1755 பேருக்கு கொரோனா” – சபா மற்றும் பின்னாங்கில் உயரும் தொற்று..!

Penang Malaysia
Image tweeted by Noor Hisham Abdullah

நேற்று மலேசியாவில் அதிகபட்சமாக 1755 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. சபா தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றது. சபாவில் 1199 பேருக்கு தொற்று பரவியுள்ளது. (penang malaysia)

சபாவிற்கு அடுத்தபடியாக பின்னாங்கிலும் தொற்றின் அளவு தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (penang malaysia)

“இந்திய உணவகங்களில் இருந்து விலகி இருங்கள்.?”

கடந்த மாத தொடக்கத்தில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மலேசியாவில் உள்ளூரில் தொற்றே இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மலேசியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை தொடங்கியதும் தொடர்ந்து தொற்று கடந்த நான்கு நாட்களாக 1000ஐ கடந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று பகல் 12 மணி நிலவரப்படி, வெளிநாடுகளில் இருந்து வந்த 3 பேர் உள்பட 1755 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று 726 பேர் கொரோனாவில் இருந்து நேற்று விடுபட்டு வீடு திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26380 ஆக உள்ளது.

நேற்றும் இருவர் கொரோனாவிற்கு மலேசியாவில் பலியான நிலையில் இதுவறை 279 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கொரோனாவில் இருந்த மீண்ட 726 பேரில் சபா பகுதியில் இருந்து 221 பேர் மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram