‘பயணிகள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்’ – மலேசிய ஏர்லைன்ஸ்

Malaysia Airlines

கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கில் முடங்கியுள்ளது. மலேசியாவிலும் தற்போது பொது நடமாட்டக் கட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்த பொது நடமாடக்க கட்டுப்பாடு வரும் ஏப்ரல் 28ம் தேதி வரை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலேசியாவில் கொரோனாவின் பரவலை பொறுத்தே இந்த கட்டுப்பாடு நீட்டிக்கப்படுமா ? அல்லது விலகிக்கொள்ளபடுமா ? என்று முடிவு செய்யப்படும்.

இந்நிலையில் மலேஷியா ஏர்லைன்ஸ் நிறுவனம் தற்போது ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தங்கள் ஏர்லைன்ஸில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. கைக்குழந்தைகள் தவிர முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகள் யாரும் பயணம் செய்ய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் கடந்த சில வாரங்களாக பெரிய அளவில் புதிய தொற்று தோன்றுவது குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.