இந்திய – மலேசியா பாமாயில் பிரச்சனை – விரைவில் தீர்வு காணப்படும்

ibrahim

கடந்த ஆண்டின் தொடக்கத்தில், மலேசியாவில் இருந்து பாயமாயில் இறக்குமதி செய்யும் இந்தியா அந்த பாமாயில் வர்த்தகத்திற்கு தடை விதித்தது. காஷ்மீர் பிரச்சனை குறித்தும் இந்தியாவில் அமலில் உள்ள இந்திய குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும் மலேசியா பிரதமர் மகாதீர் கருத்து தெரிவித்ததால் தான் இந்த தடை விதிக்கப்பட்டது என்றும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் மலேசியாவின் மூத்த அரசியல்வாதியான அன்வர் இப்ராஹிம், தான் பிரதமர் மகாதீர் அவர்களுடன் இந்த பாமாயில் பிரச்சனை குறித்து பேசியுள்ளதாக தெரிவித்தார். விரைவில் டெல்லியில் உள்ள அதிகாரிகளிடம் பேசி வலுத்து வரும் இந்த பாமாயில் பிரச்சனைக்கு நல்ல தீர்வு காணப்படும் என்று தெரிவித்தார்.

பல ஆண்டுகளாக நல்லுறவில் நீடித்து வரும் இந்தியாவும், மலேசியாவும் கண்டிப்பாக மீண்டும் இந்த வர்த்தகத்தையும், அதனால் ஏற்பட்ட பாதிப்பையும் விரைவில் சீர்செய்யும் என்றும் அவர் தெரிவித்தார். இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக மலேஷியா வந்தபாகிஸ்தான் பிரதமர், மலேசியாவில் இருந்து பாகிஸ்தான் அதிக அளவில் பாமியிலை இறக்குமதி செய்யும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.