பலவகையில் அச்சுறுத்தும் கொரோனா : ‘வீழ்ச்சியில் மலேசிய பாமாயில் சந்தை..?’

malaysia palm oil

மலேசியா பாமாயில் மீதான ஏற்றுமதி வரியை வருகின்ற ஜூன் மாதத்தில் 0% ஆக குறைத்துள்ளது. இந்நிலையில் அந்த வரி இந்த மே மாதத்தில் 4.5% ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை தேசிய சுங்கத் துறையை மேற்கோளிட்டு மலேசிய பாமாயில் வாரியம் இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய பாமாயில் உற்பத்தியாளரும் ஏற்றுமதியாளருமான மலேசியாவில் ஒரு டன் பாமாயிலுக்கு சுமார் 2,122.77 ரிங்கிட் என்ற விலை நிர்ணயிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரசை பரவளின் காரணமாக உலக அளவில் பல உணவகங்கள் மற்றும் பாமாயில் சார்ந்த நிறுவனங்கள் மூடப்பட்ட காரணத்தால் பாமாயில் வர்த்தகத்தில் பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏறத்தாழ சுமார் 35 சதவிகிதம் இந்த வர்த்தகம் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு டன்னுக்கு சுமார் 2,130 ரிங்கிட் என்ற விலை நிலவிய நிலையில் தற்போது 2,122.77 ரிங்கிட் என்று அளவிற்கு குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.