மலேசியா – சிங்கப்பூர் : எல்லைகள் மூடப்பட்டு ஓர் ஆண்டு நிறைவு.!

One year of PKP
File Twitter Image 17.03.2020

மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையிலான எல்லை மூடப்பட்டு நேற்றோடு (மார்ச் 18) ஓர் ஆண்டு முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. (One year of PKP)

இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்துக்கு கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி முதல் மீண்டும் திறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. (One year of PKP)

“மேலும் ஒரு கோவிலை இடிக்க முடிவு.?” – கெடா அரசுக்கு பி.இராமசாமி கண்டனம்.!

இந்நிலையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகத்திற்காக எல்லைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக நிலவி உள்ளது.

ஏற்கனவே ஜொகூர் பகுதி மக்கள் அரசிடம் இந்த கோரிக்கையை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் சில மாதங்களுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் திரும்பும் பணியாளர்கள் 7 நாட்கள் தனித்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் விரைவில் இரு நாடுகளில் இருந்து தொழில் ரீதியாக ஊழியர்கள் பயணம் செய்ய ஆவணம் செய்யப்படும் என்றும் மலேசியா பிரதமர் உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் மலேசியாவிற்கான சிங்கப்பூர் நாட்டின் தூதர் வேணுகோபால மேனன் அவர்கள் புத்ராஜெயாவில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் தன்னை சந்தித்து இது குறித்து பேசியதாக அவர் தெரிவித்தார்.

மேலும் சிங்கப்பூரும் விரைவில் தங்களுடைய எல்லைகள் திறக்க வாய்ப்புள்ளதாக அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram