மலேசியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் : தாயகம் அழைத்துக்கொள்ளும் திட்டம் இப்பொது இல்லை – தூதரக செய்தித் தொடர்பாளர்

US embassy in KL

COVID 19 எனப்படும் கொரோனா நோய் தொற்று காரணமாக உலகம் முழுதும் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல நாடுகளை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் வணிக ரீதியாக விமானங்கள் இயக்கப்பட்டு வரும் நிலையிலும், மலேசியாவில் இருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீண்டும் தாயகம் அழைத்துக்கொள்ளும் திட்டம் தற்போது இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஏப்.எம்.எஸ் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்க தூதரக செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசியாவுடன் தங்களுடைய நட்புறவு தொடர்கிறதும் என்றும், இந்த இக்கட்டான சூழலில் அமெரிக்காவிற்கு உதவும் மலேசிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது அமெரிக்காவிற்கு மிகவும் இக்கட்டான சூழல் என்று கூறிய அவர், ஏற்கனவே சுமார் 100 நாடுகளில் இருந்து 500 விமானங்களில் 60,000-க்கும் அதிகமான அமெரிக்கர்களை தாயகம் அழைத்து வந்துள்ளதாகவும் கூறினார். விரைவில் மலேசியாவில் உள்ள தங்கள் நாட்டு மக்களும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.