‘சிகையலங்கார கடைகளில் தேவையற்ற கட்டண உயர்வு இருக்கக்கூடாது..!!’ – அமைச்சர் அலெக்சாண்டர்

Hair Dresser

மலேசியாவில் சில தளர்வுகளுடம் கடந்த மே மாதத்தின் தொடக்கத்தில் சில பொருளாதார நிறுவனங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் மலேசியா முழுவதும் முடித்திருந்த கடைகள் திறக்க தற்போதைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட்டது. ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற ஐரோப்பிய நாடுகளில் நோய் பரவலுக்கு சலூன் கடைகள் பெரிய காரணமாக இருந்ததை சுட்டிக்காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக மலேசியாவில் நோய் தொற்றின் அளவு குறைந்து வருவதை அடுத்து தற்போது மலேசியாவின் ‘சராவாக்’ பகுதியில் மீண்டும் சலூன் கடைகளை திறக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. ஜூன் 8ம் முதல் கடைகள் திறக்கப்படலாம் என்று அம்மாநில துணை முதல்வர் டத்தோ அமார் டோக்லாஸ் தெரிவித்தார்.

தற்போது மலேசியாவில் சிகையலங்கார கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், கடையின் உரிமையாளர்கள் கிருமி நாசினி, கையுறை மற்றும் மேலங்கி போன்ற பொருட்களின் உண்மையான செலவின் அடிப்படையில் மட்டுமே கட்டணத்தில் சிறிதளவு மாற்றம் கொண்டுவரலாம் தவிர தேவையற்ற கட்டண உயர்வை அமல்படுத்தக்கூடாது என்றும் மீறினால் பயன்பாட்டாளர்கள் புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் அலெக்சாண்டர் நன்டா லிங்கி தெரிவித்துள்ளார்.