“SOP-க்களை முறையாக கடைபிடிக்காததால் தொற்று அதிகரிக்கிறது” – சுகாதார அமைச்சகம்..!

Sivagangai Cluster
Picture Courtesy says.com

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று 7 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9219 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 26 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8902 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.6 சதவிகிதமாக ஆக உள்ளது. நேற்று பாதிக்கப்பட்ட 7 நபர்களில் வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பிய 4 பேரும் உள்ளுரில் 3 பேரும் ஆவர். ஒரு மாதத்திற்கு முன்பு நோய் பரவல் கட்டுக்குள் இருந்தது அதே சமயம் தொடர்ச்சியாக 2 நாட்கள் உள்ளூரில் தொற்று இல்லாமல் இருந்தது.

ஆனால் மக்கள் சரியாக தற்போது SOP-க்களை கடைப்பிடிக்காததால் தற்போது மீண்டும் உள்ளூர் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்ட அறிக்கையில் பொதுவெளியில் மக்கள் கூடும்போதும் முறையாக SOP-க்களை கடைபிடிக்காததால் தான் தற்போது தொற்று அதிகரித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms