பரவும் கொரோனா – சீனாவில் இருக்கும் மலேசியர்களை தாயகம் கொண்டுவர திட்டம் இல்லை

malaysian people

கொரோனா வைரஸ், ஆசிய நாடுகளில் வேகமாக பரவி வருகிறது, இந்நிலையில் வுஹன், சீனாவில் உள்ள ஒரு மாகாணம், இந்த இடத்தில் தான் இந்த கொரோனா வைரஸ் தொற்று அதிகம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, ஆகையால் இந்த இடத்தில் வசிக்கும் மலேசியர்களை தாயகம் அழைத்துவரும் திட்டம் தற்போது இல்லை என்று தெரிவித்து இருக்கிறார் மலேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சைப்புதின் அப்துல்லாஹ்.

தற்போது இந்த கொரோனா வைரஸ் குறித்து உச்சகட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மலேசியாவின் துணை பிரதமர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர் சீனாவில் உள்ள வுஹன் மாகாணத்தில் உள்ள மலேசியா நாட்டு மக்களிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக தெரிவித்தார்.

2019-nCoV என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கொரோனா வைரஸ், இதுவரை சுமார் பதினான்கு நாடுகளில் சுமார் 56 பேரை பலிவாங்கியுள்ளது என்றும், 2000கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறிய துணை பிரதமர், இந்நிலையில் இதன் பிறப்பிடமான சீனாவில் வசிக்கும் மலேசியா மக்களை மீண்டும் தாயகம் கொண்டு வர திட்டங்கள் இல்லை என்றும் தெரிவித்தார். அங்கு வசிக்கும் பெரும்பாலான மலேசியர்கள் வியாபாரிகள் மற்றும் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் அவர்களின் நலனில் அக்கறை கொண்டு மலேசியாவை சேர்ந்த ஆறு குழுக்கள், சீனாவில் அவர்களோடு தொடர்ந்து தொடர்பில் உள்ளதாக அவர் தெரவித்தார். மேலும் மலேசியர்கள் அதீத தேவை இன்றி சீனாவிற்கு பயணம் மேற்கொள்ள தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

சீனாவின், Beijing, Guangzhou, Hong Kong, Kunming, Nanning, Shanghai உள்ளிட்ட இடங்களில் உள்ள அணைத்து மலேசியா தூதரகங்களும் உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்படுள்ளது என்றும் துணை பிரதமர் தெரிவித்தார்.