‘யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை’ – மலேஷியா இடைக்கால பிரதமர்

mahathir

சில தினங்களுக்கு முன்பு மலேஷியா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் மகாதீர் முகமது, அவர் அவ்வாறு அறிவித்த அடுத்த நாள் மலேஷியா மன்னரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்தார். இந்த நிகழ்வின்போது மலேஷியா மன்னரும் அவருடைய கடிதத்தை ஏற்று, அடுத்த பிரதர் பதியேற்கும் வரை மகாதீர் அவர்களே ஆட்சி பொறுப்பில் இருக்குமாறு கூறினார்.

இந்நிலையில் மலேஷியா அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று மீண்டும் மலேஷியா இடைக்கால பிரதமர் மகாதீர் முகமது, நேற்று மன்னரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பிற்கு பிறகு நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தற்போது மலேசியாவில் உள்ள சுமார் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மலேசியாவின் அடுத்த பிரதமர் யார் என்பது பற்றி அடுத்த மாதம் 2ம் தேதி கூடவிருக்கும் நாடாளுமன்றத்தில் முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளார்.

நேற்று இடைக்கால பிரதமரை சந்தித்த பின் மலேஷியா மன்னர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாகச் சந்தித்து பேசினார். அவ்வாறு பேசும்போது அவர்களது ஆதரவு யாருக்கு என்பதைப் பற்றி அவர் கேட்டறிந்தார். ஆனால், அந்த கணக்கெடுப்பில் யாருக்கு தனிப்பெரும்பான்மை உள்ளது என்பதை மன்னரால் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.