“செம்பனை தோட்டம்” : வெளிநாட்டு பணியாளர்களை நம்பி இருக்க வேண்டாம் – அமைச்சர் முகமத் கைருதீன்.!

Foreign Workers
Picture Courtesy AsiaNews

மனித உயிர்களை அனுதினம் பலிவாங்கும் இந்த கொரோனா தொற்று உலக அளவில் பொருளாதாரத்தையும் சிதைத்து வருகின்றது. பலர் இதனால் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த நோயினை சரியான முறையில் கையாண்டு வரும் மலேசியா சில புதிய விஷயங்களை நாட்டில் அமல்படுத்தியுள்ளது.

இந்த கொரோனா காலத்தில் வேலை இழந்து தவிக்கும் மலேசியர்களுக்கு உள்ளுர் நிறுவனங்கள் வேலை அளிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்த ஆண்டு இறுதி வரை வெளிநாட்டு தொழிலார்களை மலேசியாவிற்குள் அனுமதிக்க கூடாது என்ற புதிய முடிவினை அரசு அண்மையில் எடுத்து அனைவரும் அறிந்ததே.

இதையும் படிங்க : சிங்கப்பூர் – மலேசியா : PCA மற்றும் RGL பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாது – ஆதாம் பாபா.!

அதே உலக அளவில் செம்பனை எண்ணெயை ஏற்றுமதியில் மலேசிய இரண்டாம் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு தொழிலாளர்களை பெரிதும் நம்பி இருக்கும் இந்த தொழில் தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும்.

இந்த நிலையில் இந்த செம்பனைத் தோட்டவேளைகளில் ஈடுபட பூர்வக் மலேசியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் முகமத் கைருதீன் அமான் ராஸாலி அவர்கள்.

முன்பை விட செம்பனை பழங்களின் கொத்துக்கள் தற்போது அதிக அளவில் விலைக்கு விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். ஆதலால் இந்த தொழில் வெளிநாட்டு ஊழியர்களையே நம்பி இருக்காமல் உள்ளூர் தொழிலாளர்களை வேளைக்கு எடுக்க முடியும் என்றும் அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram