இந்தியர் யாரும் மலேசியாவில் கொரோனாவால் இறக்கவில்லை – மலேசிய சுகாதார அமைச்சகம்

no indian

கொரோனா அச்சம் மலேசிய நாடு முழுவதும் தொற்றி வருகிறது, இந்நிலையில் கடந்த புதன்கிழமை அன்று மலேசியாவின் ஜோஹோர் பகுதியில் உள்ள சுல்தானா அமினாஹ் என்ற மருத்துவமனையில் 22 வயதுடைய இந்தியாவின் திரிபுரா என்ற இடத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு இறந்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அந்த இளைஞர் “Status Epilepticus Secondary Meningoencephalitis” என்ற ஒரு வகை நோய் பாதிப்பால் இறந்ததாகவும், அவர் கொரோனா பாதிப்பால் இறந்ததாக கூறுவது வெறும் வதந்தி என்றும் அந்த மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மலேசிய சுகாதார அமைச்சகம் தற்போது தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது, அந்த அறிக்கையில் இந்திய நாளேடு ஒன்றில் வெளியான தகவலில் இந்தியாவின் திரிபுரா என்ற இடத்தை சேர்ந்த 22 அல்லது 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மலேசியாவில் வேலை பார்த்து வந்ததாகவும், உடல் உபாதையால் மலேசியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் கடந்த புதன் அன்று காலை உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டது.

மேலும் அந்த இளைஞரின் தாத்தா தனது பேரன் கொரோனா நோய் தொற்றால் தான் இறந்ததாக தெரிவித்துள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் தனது அறிக்கையை வெளியிட்டுள்ள மலேசியா சுகாதார அமைச்சகம், அந்த இளைஞர் கொரோனா நோய் தொற்றால் இறக்கவில்லை என்பதை உறுதி செய்துள்ளது.

இந்நிலையில் நேற்று சென்னை வந்த ஒரு பயனிக்கு கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக கண்டறியப்பட்டு, அவர் தனிமை படுத்தப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, பின்னர் அவருக்கு இருப்பது இயல்பான காய்ச்சலே அன்றி கொரோன நோய் தொற்று அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டது.