‘மலேசியாவில் தற்போதைக்கு சிகையலங்கார கடைகள் திறக்க வாய்ப்பில்லை..’ – சுகாதார அமைச்சகம்

Hair Dresser

கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி முதல் மலேசியாவில் கொரோனா காரணமாக பொது நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில் பொருளாதார சரிவை கருத்தில் கொண்டு சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் சில பொருளாதார துறைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. அவ்வாறு திறக்கப்படும் துறைகளில் கடுமையான சுகாதார முன்னெச்சரிக்கை எடுக்கப்பவேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில் சில பொருளாதார துறைகள் திறக்க அனுமதித்தபோதும், சிகையலங்கார கடைகள் திறக்க கட்டாயம் தற்போது அனுமதிக்க முடியாது என்று சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரிய அளவில் தொற்று சிகையலங்கார கடைகள் மூலமே பரவியுள்ளதாக தெரியவரும் நிலையில் தற்போதைய நிலையில் அக்கடைகளை திறக்க அனுமதிப்பது கடினம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதால் வரும் காலங்களில் மேலும் இந்த கொரோனா தொற்றை குறைக்க முடியும் என்று நம்புவதாகவும் மலேசிய அரசு தெரிவித்துள்ளது.