கோலாலம்பூர் – கொச்சி : இன்று மதியம் புறப்படும் ஏர் இந்திய விமானம் – அப்டேட் கொடுத்த High கமிஷன்..!

Bengaluru and Kochi
Image tweeted by India in Malaysia

கோவிட் 19 தொற்றால் உலகம் முடங்கி உள்ள நிலையில் பிறநாடுகளுக்கான பன்னாட்டு விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது உலகின் பல நாடுகள். இலங்கை, வியட்நாம், நியூஸிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்துள்ள நிலையில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் வலுபெற்றே வருகிறது என்பது வேதனை அளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மக்களை வந்தே பாரத் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தி தாயகம் அழைத்து வருகின்றது இந்திய அரசு. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் மலேசிய அரசின் உதவியுடன் அங்குள்ள இந்திய மக்களை இந்தியாவின் கொச்சி, டெல்லி, சென்னை, திருச்சி, கோவை மற்றும் பெங்களூரூ ஆகிய இடங்களுக்கு அழைத்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணம் செய்த கர்பிணி பெண் ஒருவர், இரு நாட்டு அரசின் இந்த முயற்சிக்கு நன்றி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மலேசியாவில் செயல்படும் இந்திய high commission வந்தே பாரத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ள அடுத்த கட்ட (மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு) விமான சேவை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது.

தற்போது அந்த அட்டவணைப்படி இன்று கோலாலம்பூரில் இருந்து சரியாக மதியம் 2.45 மணிக்கு பெங்களூரு மற்றும் கொச்சி நோக்கி பயணிக்க இருக்கும் ஏர் இந்தியா விமானத்தின் ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன என்ற High கமிஷன் தற்போது வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms