இந்தியா – மலேசியா : புதுப்பிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள்.!

New Travel Regulations
Image Tweeted by air india express

கொரோனா பரவலை தொடர்ந்து பன்னாட்டு பயணம் தற்போது மிகவும் கட்டுப்பாடுகள் உள்ளதாக மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (New Travel Regulations)

இந்நிலையில் பல நாடுகளும் தங்கள் நாட்டிற்குள் நுழைய பிற நாட்டு மக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றது. (New Travel Regulations)

“கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை” – 186 தனியார் மருத்துவர்களுக்கு அனுமதி.!

தற்போது இந்தியா முதல் மலேசியா பயணிப்பதற்காக தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ள பயண விதிகள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1. மலேசியா பயணிப்போர் கட்டாயம் “MySejahtera” செயலியை தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து வேண்டிய தகவல்களை அளிக்க வேண்டும்.

2. பேரிடர் மேலாண்மை வாரியம் மற்றும் சுகாதார அமைச்சகம் வழங்கும் நெறிமுறைகளை பின்பற்றி 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.

3. மலேசியாவில் தரையிறங்கும்போது கட்டாய கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

4. மலேசியாவில் நுழைவோர் MyPR அல்லது முறையான பாஸ்போர்ட் இல்லாதவர்கள் கட்டாய விசா வைத்திருக்க வேண்டும்.

5. Letter of Undertaking எனப்படும் LoU என்ற படிவத்தை (www.nadma.gov.my) என்ற இணையத்தில் பதிவு செய்து மலேசிய உயர்க்கமிஷனில் ஒப்படைக்க வேண்டும்.

6. மேலும் மேல் குறிப்பிட்ட அந்த படிவங்கள் பயணத்தேதிக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக மலேசிய உயர் கமிசனை சென்றடைய வேண்டும்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram