“Hari Raya Aidiladha” – சில கட்டுப்பாடுகளுடன் புதிய SOP-யை வெளியிட்ட மூத்த அமைச்சர்..!!

Hari Raya
Image Tweeted by Ismail Sabri yakob

மலேசியாவில் நோய் தொற்றின் அளவு நாளுக்கு நாள் குறைந்து அதே சமயம் அதிகரித்து வருகின்றது. தொற்றின் அளவு முழுமையாக குறையாதபட்சத்தில் நாட்டில் அனுதினமும் புதிய SOP-க்கள் அமலுக்கு வந்தவண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது Hari Raya Aidiladha தியாக விழாவிற்கு புதிய SOP ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார் முத்த அமைச்சர் டத்தோ இஸ்மாயில் சபரி யாக்கோப் அவர்கள். நேற்று தொலைக்காட்சி மூலம் மக்களையும் செய்தியாளர்களையும் அவர் சந்தித்தார்.

அப்போது அவர் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் Hari Raya Aidiladha தியாக விழாவின்போது பலியிடப்படும் விலங்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மசூதிகள், சூரஸ் மற்றும் மாவட்ட மத அலுவலகம் மற்றும் உள்ளாட்சி அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்ட இடங்களில் அதிகபட்சமாக 10 விலங்குகள் பலிகொடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பலிகொடுக்கும் வழிபாட்டின்போது இடத்தின் அளவை பொறுத்து ஒரு விலங்குக்கு அதிகபட்சம் 20 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலிகொடுக்கும் இடங்களில் விருந்திற்கு பதிலாக உணவினை பார்சல் வழங்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms