இந்தியா விதித்த ‘திடீர்’ கட்டுப்பாடு – பாதிக்குமா மலேசியாவின் வாணிபம் ?

magathir

சுத்திகரிகப்பட்ட பாமாயிலை இறக்குமதி செய்ய புதிதாக பல கட்டுபாடுகளை தற்போது விதித்துள்ளது இந்தியா. இந்த புதிய கட்டுபாடுகள் கண்டிப்பாக மலேசியாவின் பாமாயில் வணிகத்தை பாதிக்கும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். ஏன் இந்த திடீர் கட்டுப்பாடு, இப்படி ஒரு புதிய கட்டுபாட்டை இந்தியா விதிக்க காரணம் என்ன ?.. அண்மையில் மலேசியா பிரதமர் மகாதீர் ‘காஷ்மீரை வலுக்கட்டயமாக ஆக்கிரமித்துள்ளது இந்தியா’ என்ற ஒரு கருத்தினை வெளியிட்டார். தற்போது மலேசியா பிரதமரின் இந்த கருத்து தான் விதிக்கப்பட்டிருக்கும் புதிய கட்டுபாட்டிற்கு காரணம் என்று பரவலாக பேசபடுகிறது.

மலேசியாவின், உள்நாடு உற்பத்தியில் 2.8 சதவிகிதம் பங்களிப்பு கொண்டுள்ள பாமாயில் அந்நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 4.5 சதவிகிதம் தனது (பாமாயில்) பங்கினை கொண்டுள்ளது. இந்த நிலைபட்டால் இந்தியா விதித்துள்ள புதிய கட்டுப்பாடு மலேசியாவின் வணிகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது, ஆனால் மலேசியாவை சேர்ந்த வல்லுனர்கள் இந்த வணிகத்தில் இந்தியா கைவிட்டாலும் மலேசியாவால் பல புதிய சந்தைகளை உருவாக்க முடியும் என்றும், மலேசியாவின் இந்த நடவைக்கையால் இந்தியாவிற்கு தான் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வு குறித்து MAICCI என்று அழைக்கபடும் Malaysian Associated Indian Chambers of Commerce and Industryயின் பொதுச் செயலாளர் ‘குமாரராஜா’ பேசும்போது, இந்தியா விதித்துள்ள பாமாயில் கட்டுப்பாடும், அதனால் மலேசியாவிற்கு ஏற்பட இருக்கும் பாதிப்புகளும் உடனடியாக தெரியாது என்று குறிபிட்டார். மேலும் நேச நாடுகளாக திகழும் இந்தியாவும் மலேசியாவும் அரசியலை கடந்து இந்த நிகழ்வு குறித்து பேசி முடிவெடுக்க வேண்டும் என்றும்  அவர் தனது கருத்தை முன்வைத்தார்.

மேலும் எத்தியோபியா போன்ற ஆப்ரிக்க நாடுகளில், மலேசியா பாமாயில் சந்தையை விரிவுபடுத்தி புதிய சந்தையை உருவாக்கலாம், ஆனால் அந்த சந்தையில் காலுன்ற மலேசியாவிற்கு சில காலம் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.