“வந்தே பாரத் : தமிழகம் வருவோரின் கவனத்திற்கு” – ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கை..!

Vanthe Bharath
Image tweeted by Air India Express

பரவி வரும் தொற்றின் காரணமாக உலகமே பூட்டுதலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிற நாடுகளில் உள்ள மலேசிய மக்களை தாயகம் அழைத்து வருகின்றது மலேசிய அரசு.

அதே போல பல மாதங்களாக கட்டுக்குள் இருந்த தொற்று தற்போது மீண்டும் தலைதூக்க தொடங்கி உள்ளதால் வெளிநாடுகளில் இருந்து திரும்ப மலேசியா வருவோருக்கு பல வகை தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பிற நாடுகளை சேர்ந்த மக்களை தடையின்றி அவரவர் நாடுகளுக்கு மலேசிய அரசு அனுப்பிவைத்து வருகின்றது.

இதையும் படிங்க : “மலேசியாவில் ஒரே நாளில் 56 உள்ளூர் தொற்று” – பீதியில் ஆழ்ந்த Sabah பகுதி மக்கள்..!

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் அண்டை நாடான இந்திய அவர்கள் நாட்டு மக்களை தாயகம் அழைத்து சென்று வருகின்றது.

அதே சமயம் தற்போது இந்தியாவில் உள்ள பல பகுதிகள் பல விதிகளையும் விதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிற நாடுகளில் இருந்து தமிழகம் வருவோர் பயணத்தேதிக்கு 96 மணிநேரத்திற்கு முன்பு கட்டாயம் RT-PCR என்ற சோதனையை (Negative) கட்டாயம் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதே சமயம் அங்கு (தமிழகத்தில்) தற்போது நடைமுறையில் உள்ள E-pass பதிவினை கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் என்றும் தெரிவித்துள்ளது. மேற்குறிய ஆவணங்கள் உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram