‘நாடு திரும்பும் மலேசியர்கள்..!!’ : அமலுக்கு வரும் புதிய விதிமுறை – இஸ்மாயில் சபரி யாகோப்

ismayil sabari

பிற நாடுகளை போல கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பிற நாடுகளில் சிக்கியுள்ள மலேசியர்களை, தாயகத்திற்கு திரும்ப அழைத்து வருகின்றது மலேசிய அரசு. இந்நிலையில் அவ்வாறு பிற நாடுகளில் இருந்து தாயகம் வருபவர்கள் அரசு நியமித்துள்ள இடங்களில் கட்டாய தனிமைப்படுத்துதலில் வைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த நிகழ்வில் தற்போது புதிய தளர்வை ஏற்பாடு செய்துள்ளது மலேசிய அரசு.

பிற நாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அந்த சோதனையில் கொரோனா தொற்று உள்ளவர்கள் அரசு முகாம்களில் தனிமைபடுத்தப்படுவர், அதே சமயம் தொற்று இல்லாதவர்கள் வீட்டிற்கு அனுப்படுவர். ஆனால் அங்கும் அவர்கள் தங்களுடைய வீடுகளில் தங்களை தனிமைபடுத்திகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

மேலும், நோய் தொற்று இல்லாதவர்கள் மைசெஜாத்திரா பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவேண்டும், அதுமட்டும் இல்லாமல் தனிமைபடுதப்படும் காலம் முழுவதும் அவர்கள் அந்த கைப்பட்டையை (wristband) அணிய வேண்டும் என்றும் இஸ்மாயில் கூறியுள்ளார்.