பயன தடை – மலேசியா வரும் சீனர்களுக்கு புதிதாக விதிக்கப்படும் கட்டுப்பாடு

evisa

உலக நாடுகளை தொற்றிக்கொண்டுள்ளது புதிதாக வந்திருக்கும் கிருமி பயம், சீனாவின் வுஹன் மாகாணத்தை தவிர வேற இடங்களில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் சற்று பயத்துடனே நாட்களை கடந்துகின்றனர் மலேசிய வாசிகள், மலேசிய நாட்டில் மலேசியர்கள் அல்லாத சிலருக்கு தான் இந்த நோய் தொற்று உள்ளது என்று தெரியவந்ததால் மக்கள் சற்று மன அமைதியுடன் காணப்படுகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு என்னவோ மலேசிய அரசுக்கு சரிவர தொடங்கவில்லை, அரசியல் குழப்பங்களுடன் தொடங்கிய வருடம் பாமாயில் தடை, Electronic பொருட்களுக்கான தடை, சட்டவிரோத குடியேற்றம் என்று பல வகையில் பிரச்சனைகளை சந்திக்கும் நேரத்தில் சீனாவில் இருந்து வந்து இறங்கியுள்ளது கொரோனா.

பிறநாட்டு சுற்றுலா பயணிகளை குறிப்பாக சீனாவில் இருந்து வரும் பயணிகள் அனைவரையும் மொத்தமாக தனிமை படுத்த முடியாது என்று நேற்று மலேசிய பிரதமர் கூறினார். கண்டிப்பாக எந்த ஒரு அரசாலும் அதை அவ்வளவு எளிதில் செய்ய முடியாது என்பது நிதர்சனமான உண்மை. இருப்பினும் மலேசியா அரசு இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய ஒரு வழியை கண்டுபிடித்துள்ளது.

சீனாவில் இருந்து குறிப்பாக, வுஹன் மாகாணத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு eVisa எனப்படும் ஆன்லைன் விசாவிற்கும், On Arrival Visa எனப்படும் விசாவிற்கும் தற்போது தடைவித்துள்ளது. இதனால் பாதிப்பு அடைந்த பகுதிகளில் இருந்து வரும் பயணிகளின் அளவை கணிசமாக குறைக்கலாம் என்ற முடிவில் மலேசிய அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது.