கொரோனா : ‘புதிய மருந்தின் சோதனை’ – மலேசியாவை தேர்ந்தெடுத்த WHO

WHO

உலகம் முழுதும் பரவி வரும் கொரோனா நோயினை தடுக்க பல நாடுகளும் முயன்று வருகின்றது. இது வரை எந்த நாடும் இந்த கொரோனா நோய்க்கு எதிராக அதிகாரப்பூர்வமாக எந்த மருந்தினையும் கண்டறியவில்லை. இந்நிலையில் பரவி வரும் இந்த நோய் தொற்றினை எதிர்த்து போராட ஒரு புதிய மருந்தினை சோதனை செய்ய மலேசியாவை உலக சுகாதார மையம் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலேஷியா இன்று என்ற சசெய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த தகவலின் அடிப்படையில், உலக சுகாதார மையம் நடத்தும் இந்த சோதனை முயற்சி மலேசியாவில் நடத்தப்படும் என்று மலேசிய பாதுகாப்பு மன்றம் தெரிவித்துள்ளது. மேலும் மலேஷியா சுகாதார மையத்திற்கு இந்த நிலையை கையாளும் திறன் உள்ளதாக நம்பப்படுகிறது.

உலக சுகாதார அமைச்சகம் அளிக்கும் இந்த மருந்தினை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு அளித்து சோதனை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மலேசியாவில் பாதிப்பு எண்ணிக்கை 2,320 ஆக அதிகரித்துள்ளது. அதே போல மலேசியாவில் இறப்பு எண்ணிக்கை 27-ஐ தொட்டுள்ளது.