மலேசியா : “சுமார் 30,000 ஊழியர்கள் வேலை இழப்பு..?” – அப்துல் ஹலிம் மன்சோர்

Hotel workers

தொடர்ந்து பரவும் இந்த கொடிய கொரோனா காரணமாக உலக பொருளாதாரம் பெரிய அளவில் ஆட்டம்கண்டுள்ளது. வல்லரசு நாடு முதல் வளரும் நாடு வரை பூமிப்பந்தில் உள்ள அனைத்து நாடுகளும் பெரிய அளவில் பொருளாதார வீச்சியை எதிர்கொண்டுள்ளது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் மலேசியாவில் சுமார் 30,000 தொழிலார்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவில் கொரோனா தாக்கத்தை சுமார் ஹோட்டல் துறை சார்ந்த வேளைகளில் இருந்த சுமார் 30,000 தொழிலார்கள் வேலை இழந்துள்ளதாக மலேசிய தொழிற் சங்க காங்கிரஸ் (எம்டியூசி) தலைவர் திரு. அப்துல் ஹலிம் மன்சோர் கூறியுள்ளார். இது ஒருபுறம் இருக்க 10,000க்கும் அதிகமான தொழிலார்கள் சம்பளம் இல்லாத கட்டாய விடுப்பில் செல்ல கேட்டுக்கொண்டுள்ளதாகவும், சுமார் 6000 தொழிலார்களின் சம்பளம் பாதியாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தொழிலார்கள் நலன் கருதி தங்களுடைய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக குறைந்த அளவிலான கட்டணம் மற்றும் பிற பல சலுகைகளை அளிக்க ஹோட்டல் நிர்வாகம் முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.