COVID – 19 : ‘புக்கிட் ஜலீல் குடிநுழைவு மய்யம்..!!’ – ‘ஒரே நாளில் 155 வெளிநாட்டவருக்கு நோய் தொற்று..?’

Bukit Jalil

கடந்த சில வாரங்களாக மலேசியாவில் உரிய ஆவணங்கள் இன்றி தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் அனைவரும் மலேஷியா அரசால் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த மாதத்தில் மட்டும் சுமார் 2000 வெளிநாட்டவர்கள் உரிய ஆவணம் இன்றி கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளை சேர்ந்த மக்கள் அடங்குவர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் தற்போது புக்கிட் ஜலில் மற்றும் செமெனியி தடுப்புக் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் அவ்வாறு அவர்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் போதிய வசதிகள் இல்லாமல் ஒரே அறையில் பலர் தங்க வைக்கப்பட்டுள்ளதால் அந்த இடங்களில் நோய் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில் நேற்று புக்கிட் ஜலில் மையத்தில் உள்ள 155 பேருக்கு நோய் தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பதட்டம் சூழல் நிலவி வருகின்றது.

இதனை தொடர்ந்து இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சக இயக்குனர் ஜெனரல் சுகாதாரப் பராமரிப்பில் நாம் வெளிநாட்டவருக்கு பாரபட்சம் கட்டக்கூடாது என்று கூறியுள்ளார். சுமார் 2 தடுப்பு நிலையங்களில் தற்போது அதிக அளவு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.