“மைசெஜாத்தெரா-வில் பதிவு செய்து தடுப்பூசி பெறலாம்” – நூர் ஹிஷாம் அப்துல்லா.!

MySejahtera Application
Image Tweeted by Noor Hisham Abdullah

மைசெஜாத்தெரா செயலி மூலம் பதிவு செய்து தானும் தனது சகாக்களும் கொரோனா தடுப்பூசியினை பெற்றுக்கொண்டதாக நூர் ஹிஷாம் அப்துல்லா தெரித்துள்ளார். (MySejahtera Application)

மலேசியாவில் கடந்த 21ம் தேதி முதற்கட்ட தடுப்பூசிகள் ஜெர்மன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெறப்பட்டது. (MySejahtera Application)

“பள்ளிகள் திறக்கும் முன் 50000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி” – அமைச்சர் கைரி ஜமாலுடின்

அதன் பிறகு தற்போது நேற்று முதல் அந்த கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு மலேசியாவில் வந்துள்ளது.

முதல் டோஸ் தடுப்பு மருந்தினை மலேசிய பிரதமர் முஹிதீன் யாசின் பெற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து சுகாதார அமைச்சக இயக்குநர் ஜெனரல் பெற்றுக்கொண்டார்.

அவரை தொடர்ந்து அவருடைய அலுவலக சகாக்களுக்கு கொரோனா தடுப்பூசி முறையே வழங்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு “மைசெஜாத்தெரா” MySejahtera என்ற செயலி மூலம் கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியானது.

மேற்குறிப்பிட்ட அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் பிறகு மக்கள் தங்களுடைய தகவல்களை அதில் பதிவிட வேண்டும்.

அண்ட்ராய்டு மற்றும் ios ஆகிய தரவுகளில் இந்த செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram