“பொருளாதார வீழ்ச்சி” – இந்தியர்கள் உள்பட தாயகம் திரும்ப அனுப்படும் முஸ்தபா சென்டர் தொழிலாளர்கள்..!

Mustafa-Centre

கொரோனா காரணமாக பொருளாதாரம் என்பது தற்போது உலக அளவில் கேள்விக்குறியாக மாறியுள்ளது. விண்ணைமுட்டும் அறிவியல் மற்றும் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளே இந்த இக்கட்டான சூழலில் ஆட்டம்கண்டுள்ளன என்றால் அது மிகையல்ல.

உலக நாடுகளை பொறுத்தவரை இந்த 5 மாத கால முடக்கம் என்பது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியே என்பது பலரும் அறிந்த உண்மை.

தற்போது உலக நாடுகள் இழந்துள்ள இந்த இழப்பை சரி செய்யவே பல ஆண்டுகள் பிடிக்கும் என்ற நிலையில் பல வர்த்தக நிலையங்கள் ஆட்டம் கண்டுள்ளன.

இதையும் படிங்க : “இந்தியர்கள் உள்பட 32 நாடுகளை சேர்ந்த 11,280 பேர்” – Quarantine முடிந்து வீடு திரும்பினார்..!

இந்நிலையில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களில் செயல்பட்டு முஸ்தபா சென்டர் தற்போது மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்துள்ளது என்றால் அது மிகையல்ல.

அந்த நிலையத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அந்த நிலையம் மூடப்பட்டது.

அதன் பிறகு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட காலத்தில் மீண்டும் அங்கு தொழில்கள் தொடங்கப்பட்டது.

முஸ்தபா சென்டர் பெரும்பாலும் அந்நிய நாட்டு தொழிலாளர்கள் மற்றும் நுகர்வோரையே நம்பியுள்ள நிலையில் அந்த நிறுவனத்தால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை.

ஏற்கனவே தங்களிடம் வேலை செய்து வந்த ஊழியர்களுக்கு மாதம் 300 டாலர் சம்பளம் வழங்கி வந்த அந்த நிறுவனத்தால் தற்போது சந்தித்து வரும் நஷ்டம் காரணமாக தொடர்ந்து சம்பளம் தர இயலாத நிலை உள்ளது.

தற்போது வெளிநாட்டு தொழிலார்களுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களிடம் வேலைபார்த்து வரும் இந்தியா உள்பட பிற நாட்டு தொழிலார்களை திருப்பி அனுப்பி வருகின்றது அந்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

 Facebook

Telegram