“அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சருக்கு தொற்று” – வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்ட மலேசிய பிரதமர்..!

PKP Malaysia
Image tweeted by muhyiddin yassin

மலேசியாவில் பரவி வரும் தொற்று குறித்தும், தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்தும் சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் மலேசிய சுகாதார அமைக்க இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) நேற்று ஒரே நாளில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு தொற்றின் அளவு அதிகரித்துள்ளது.

வெளிநாட்டில் இருந்து மலேசியா திரும்பிய மூவருக்கு தொற்று உறுதியானது. மேலும் உள்ளூர் தொற்று பல மாதங்கள் கழித்து கடந்த 3 நாட்களாக 3 இலக்கத்தை தொட்டு வருகின்றது.

இந்நிலையில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு மலேசியாவில் ஒரே நாளில் (உள்ளூரில்) 429 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்று மட்டும் 57 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : “அலோர் சீடர் சிறைச்சாலையில் தொற்று” – 14 நாட்களுக்கு விதிக்கப்பட்ட இயக்கக்கட்டுப்பாடு..!

நாட்டில் தற்போது கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 12,813 என்ற அளவை தொட்டுள்ளது.

அதே சமயம் 10,340 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதே போல இதுவரை 137 பேர் கொரோனா காரணமாக மலேசியாவில் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று அதிகபடச்சமாக Kedah பகுதியில் 241 பேரும், Sabah பகுதியில் 130 பேரும் சிலாங்குர் பகுதியில் 32 பேரும் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 3ம் தேதி நடைபெற்ற அமைச்சரை கூட்டத்தில் பங்கேற்ற மலேசியாவின் மத விவகார அமைச்சர் டாக்டர்.

ஸுல்­கி­ஃப்லி முகம்­மது அல்-பக்­ரி அவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

இதனை தொடர்ந்து அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். மேலும் இந்த கூட்டத்தில் மலேசியா பிரதமரும் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி மலேசிய பிரதமர் வீட்டில் 14 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.

இருப்பினும் தனது அரசாங்க பணிகளை வீட்டில் இருந்தபடியே தொடர்வேன் என்று மலேசிய பிரதமர் தெரிவித்துள்ளார். தேவைப்படும் பட்சத்தில் காணொளி காட்சி வாயிலாக கூட்டங்கள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

 Facebook

Telegram