‘இனி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டாம்’ – மலேசியர்களுக்கு சலுகை அளித்த இங்கிலாந்து..!

UK and Malaysia
Picture Courtesy FLAG

கடந்த சில நாட்களாக மலேசியாவில் 20-க்கும் குறைவாகவே கொரோனவால் புதிய பாதிப்புக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மலேசியாவில் பாதிப்புக்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் நேற்று மட்டும் 11 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 9094 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 9303 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை 96.8 சதவிகிதமாக ஆக உயர்த்தி உள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோய் தொற்று உருவாகிய காலத்தில் இருந்தே மலேசியா அரசின் அனைத்து துறையும் சிறந்த முறையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முகக்கவச கட்டாயம், பொதுவெளியில் இடைவெளி, சிறந்த தனிமைப்படுத்துதல் மையங்கள் என்று சிறந்த முறையில் அரசு செயல்பட்டு வருவதால் தற்போது இங்கிலாந்து அரசு மலேசியா பயணிகளுக்கு ஒரு சலுகையை வழங்கியுள்ளது. பிறநாடுகளை போல இங்கிலாந்திலும் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மலேசியா மற்றும் ப்ருனெய் ஆகிய நாடுகளில் இருந்து வருவோர் இனி தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை என்று தெரிவித்துள்ளது. இந்த விதி இன்று முதல் அமலுக்கு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

மலேசிய செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…

?? Facebook – https://www.facebook.com/tamilmicsetmalaysia/

?? Twitter      – https://twitter.com/malaysiatms