மலேசியா : நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு – மேலும் நான்கு வாரங்களுக்கு நீட்டிப்பு..

Malaysia PM

கொரோனாவின் தாக்கம் மலேசியாவில் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதால் தற்போது நிலவும் நிபந்தனைக்குட்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் நான்கு வாரங்களுக்கு நீடிக்கும் என்று தற்போது மலேசிய பிரதமர் நேரலை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய துறைகளுடன் கலந்துரையாடி அதன் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளன அந்த செய்தி குறிப்பில் பிரதமர் முகிதீன் யாசின் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மார்ச் மாதம் 18ம் தேதி முதல் பொது நடமாட்டக் கட்டுப்பாடு நிலவி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பொருளாதார வீழ்ச்சியை கருத்தில் கொண்டு சில பொருளாதார மையங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது நிலவும் இதே கட்டுப்பாடுகளுடன் மேலும் நான்கு வாரங்களுக்கு ஜூன் மாதம் 9ம் தேதி வரை இந்த கட்டுப்பாடு நீடிக்கும் என்றும் தகவல் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.

இதுவரை மலேசியாவில் 6589 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 4929 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.