மலேசியா : மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு – கட்டுப்பாட்டை மீறியதாக 70க்கும் மேற்பட்டோர் கைது..!! 

Ismayil Sabri yakob
Photo Courtesy : malaysia.news.yahoo.com

மார்ச் மாதம் தொடங்கிய ஊரடங்கு தற்போது மலேசியாவில் தளர்வு அடைந்துள்ளது. கடந்த மாதம் தொடங்கி பொருளாதார துறைகள் திறக்கப்பட்டு வணிகம் நடைபெற்று வருகின்றது. மேலும் வரும் ஜூலை மாதம் 15ம் தேதி முதல் ஐந்து மற்றும் ஆறாம் படிவம் பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பிறருக்கு அதற்கு அடுத்த வாரங்களில் தொடங்கப்படும் என்றும் அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையில் அந்த கட்டுப்பாட்டை மீறியதாக சுமார் 70க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக தற்காப்பு துறைக்கான மூத்த அமைச்சர் இஸ்மாய்ல் அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் மதுபான விடுதிகளில் மட்டும் சுமார் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

தொற்றை குறைக்கவும் பரவும் நோயை ஒழிக்கவும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைகிறது என்று பலரும் தெரிவித்து வருகின்றனர். அரசுடன் மக்களும் இணைந்து உழைத்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.