மலேசியா : இதுவரை சுமார் 65,000 வெளிநாட்டவர்களுக்கு கோவிட் 19 சோதனை நடத்தப்பட்டுள்ளது – சுகாதார அமைச்சகம்..!!

Noor Hisham Abdullah
Image Tweeted by Noor Hisham Abdullah

மலேசியாவில் கொரோனா குறித்து தினமும் ஏற்படும் பாதிப்பு மற்றும் குணமடையும் மக்களின் எண்ணிக்கை குறித்து சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் மலேசிய சுகாதார இயக்குனர் ஜெனரல் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில் (பகல் 12 மணி நிலவரப்படி) இன்று 3 பேர் புதிதாக கொரோனாவால் மலேசியாவில் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் இது பாதிப்பு எண்ணிக்கையை 8737 ஆக உயர்த்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று மட்டும் 22 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளாகவும் இதுவரை மொத்தம் 8538 பேர் இந்த நோயில் இருந்து பூரண குணமடைந்துள்ளாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 97.7 சதவிகிதமாக ஆக உள்ளது.

மேலும் இன்று நல்வாய்ப்பாக மலேசியாவில் யாரும் கொரோனாவிற்கு பலியாகாத நிலையில் இறந்தவர்களின் எண்னிக்கை 122ஆக உள்ளது. மேலும் மலேசியாவில் கடந்த 15 ஜூலை 2020 வரை சுமார் 65,000க்கும் அதிகமான வெளிநாட்டவர்களுக்கு கோவிட் 19 சோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.