கொரோனா : மலேசியாவில் 2000ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை

spread in malaysia

கொரோனா வைரஸ் பரவுதலை தொடர்ந்து கணித்து worldometers.info என்ற இணையதளம் ஒன்று தினமும் அறிக்கை வெளியிட்டு வருகின்றது . இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இதுவரை இந்த நோயின் காரணமாக உலக அளவில் சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இந்த நோய் தாக்கி இதுவரை உலக அளவில் சுமார் 25,000-க்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுமார் 1,33,527 பேர் இந்த கொரோனா நோயில் இருந்து குணமடைந்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேப்போல அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் மலேசியாவில் இதுவரை சுமார் 2320 பேர் இந்த நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே போல இந்த நோயின் காரணமாக மலேசியாவில் 27 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே போல சுமார் 320 பேர் இந்த நோயில் இருந்து குணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

தற்போது வரை மலேசியாவில் விதிக்கப்பட்டிருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டை மீறியதாக சுமார் 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.