மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்ட ‘ரோஹிங்கியா’ இன மக்கள் – ‘நடுக்கடலில் நேர்ந்த சோகம்’

Rohingya people

பரவி வரும் கொரோனா காரணமாக உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பல விதங்களில் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் மலேஷியா நோக்கி படகில் வந்த கொண்டிருந்த ‘ரோஹிங்கியா’ என்ற இனத்தை சேர்ந்த மக்கள் ஏறக்குறைய இரண்டு மாதங்களாக வங்காள விரிகுடாவில் சிக்கித் தவித்துள்ளனர். அந்த படகில் வந்த 20க்கும் அதிமான ரோஹிங்கியா இன மக்கள் இருந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பட்டினியால் வாடி வந்த நூற்றுக்கணக்கான் மக்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளார்.

படகில் மலேசியாவை அடைய முயற்சித்த அந்த மக்கள் தற்போது பங்களாதேஷ் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர். 20க்கும் அதிகமானோர் இருந்துள்ளதாக அஞ்சப்படும் நிலையில் தற்போது 400 பேர் மீட்கப்பட்டுள்ளதாக பங்களாதேஷ் கடற்படையினர் கூறியுள்ளனர்.

250க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் இருப்பதாகவும் அவர்கள் பசியால் வாடி வருவதாகவும் ரகுமான் என்ற அதிகாரி தெரிவித்தார். இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள (பெயர் கூற மறுத்த) அந்த இன மக்களின் தலைவர்களுள் ஒருவர். அந்த படகில் சுமார் 482 பேர் பயணம் செய்ததாக கூறியுள்ளார்.
“ரோஹிங்கியா இன மக்கள், மலேசியாவில் தரையிறங்க பல முறை முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றதாகவும் கூறும் அவர், இன்னும் சில படகுகளில் மக்கள் நடுக்கடலில் சிக்கியிருக்கலாம் என்றும் கூறினார்.